The cock has to fight - PMK

தமிழகத்தில் சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

கரூரில இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துளை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டுகளில் சேவல் சண்டையும் ஒன்று. கிராமப் பகுதிகளில் விளையாட்டுக்கென சேவல்களை வளர்த்து இரண்டு சேவல்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து வந்தனர். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும். 

இது அல்லாமல் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வெற்றுக்கால் சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தியைக் கட்டாமல் வெற்றுக் கால்களுடன் போட்டி நடக்கும். இதில் பெரிய சேவல், சின்ன சேவல் என பிரித்து போட்டிக்கு விடப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம்பிடித்தாலோ அந்த சேவல் தோல்வியை தழுவியதாக கருதப்படும். 

இது தமிழகத்தில் தென் மாவட்டத்திலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரவாக்குறிச்சி பகுதியில் புலான் வலசு, சீத்தைபட்டி ஆகிய இடங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள். இதில் உண்மையிலே கத்தியில்லாமல் சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது. 

3 நாள் நடக்கும் இந்த சண்டையில் 10,000 பேருக்கு மேல் திரண்டு வருகிறார்கள், 10 கோடி வரை பணம் புரளுகிறது. சேவல் சண்டைக்கு பதிவு கட்டணம்
ரூ.1,000 எனவும் பிரமாண்டமான கடைகளுக்கு 1 கடைக்கு 1 லட்ச ரூபாய் வாடகையாகவும், சாரயம் முதல் மதுபான பாட்டில்கள் வகைவகையாய்
கிடைக்கும். இப்படி நடந்த சேவல் சண்டையில் தான் கத்தியில் வைத்த விஷத்தினால் ஒருவர் இறந்து போக பிரச்சனை பூதகரமாக மாறி நீதிமன்றம் வரை சென்று சேவல் சண்டைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

ஆனால் தற்போதும் போலீசுக்கு பணத்தை கொடுத்து இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்த சூதாட்ட சேவல் சண்டை நடத்தி கைதாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி எதுவும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு எப்படி திருத்தப்பட்ட சட்ட வரைவு கொண்டு வந்தார்களே அதே போல சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும். என்றார். 

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு தடை விதித்த போது தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாகி கொண்டே இருக்கிறது.