கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே  மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவரை சுகாதாரதுறை இணை இயக்குனர் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரதுறை இணை இயக்குனர் கண்ணனிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். 

இதனையடுத்து வடசித்தூரில் முத்துலட்சுமி என்பவரது ஆயுர்வேதிக் கிளினிக்கில் சுகாதாரதுறை இணை இயக்குனர் கண்ணணன் திடீரென ஆய்வு நடத்தினார். 

அப்போது மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தும், ஊசி போட்டும் முத்து லட்சுமி மருத்துவசிகிச்சை அளிப்பது தெரியவந்தது. 

மேலும் கிளினிக் அமைந்துள்ள பகுதியினுள் படுக்கைகள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
உடனே சுகாதாரதுறை அதிகாரி நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து  போலி மருத்துவர் முத்துலெட்சுமி தப்பி ஓடிவிட்டார். 

தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போலி மருத்துவர் முத்துலட்சுமியை தேடிவருகின்றனர்.