Asianet News TamilAsianet News Tamil

"வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை"  - நடிகர் கமல் டுவிட்

The climax of the heroism is nonviolence - Kamal
The climax of the heroism is nonviolence - Kamal
Author
First Published Sep 10, 2017, 10:23 AM IST


வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை. அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோயில் தமிழ்நாடு வணங்குதல் நலம் என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், அண்மை காலமாக சமூகம் குறித்து தொடரந்து தனது டுவிட்டர் பக்கம் வழியாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். 

கமலின் டுவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். 

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். சட்டத்தை உருவாக்கியது நாம் தான் என்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,  தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள், ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது என்றும் விவாதங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும், வாருங்கள் விவாதிக்கலாம் நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு சென்று பார்வையிட்ட நடிகர் கமல், பின்னர் அது குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை. அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோயில் தமிழ்நாடு வணங்குதல் நலம் என்றும் நடிகர் கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios