Asianet News TamilAsianet News Tamil

கார்த்திகை தீபத் திருவிழாவில் 63 நாயன்மார்களை பள்ளி சீருடையில் தூக்கிச் சென்ற சிறுவர்கள்...

The children who went to school nurses in school uniform at Karthikai Deepath festival ...
The children who went to school nurses in school uniform at Karthikai Deepath festival ...
Author
First Published Nov 29, 2017, 9:28 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதியுலாவில்  நாயன்மார்களை  இருந்த பல்லக்குகளை பள்ளி சீருடையில் சிறுவர்கள் தூக்கிச் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை தீபத் தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலையில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுக்கு கோயிலில் சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். பின்னர், காலை 10 மணிக்கு நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது.

நாயன்மார்களைத் தொடர்ந்து, சமயக் குரவர்கள் நால்வரும், வெள்ளி மூசிக வாகனத்தில் விநாயகரும் வீதியுலா வந்தனர். கடைசியாக வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்து அடியார்களிக்கு காட்சியளித்தார்.

இதில், பள்ளிச் சிறுவர்கள் பலர் ஏராளமாக கலந்து கொண்டு 63 நாயன்மார்களையும் தங்களின் தோளில் சுமந்தபடி அண்ணாமலை போற்றி என்று முழங்கியபடி மாட வீதிகளை வலம் வந்தனர்.

வழிமுழுவதும் ஏராளமான அடியார்கள் திரண்டு நாயன்மார்களையும், சமயக் குரவர்கள் நால்வரையும் வழிபட்டனர்.

மாட வீதிகள் முழுவதும் நாயன்மார்களின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வந்ததை கண்டு அடியார்கள் மனமகிழ்ந்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios