Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகளில் கோடை கால வகுப்புகள் நடத்த தடை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

the Child Rights Protection Commission has been ordered to ban summer classe
the child-rights-protection-commission-has-ordered-to-b
Author
First Published Apr 25, 2017, 5:49 PM IST


கேரளாவில் கொளுத்தும் வெயில், குடிநீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏராளமான பள்ளிகள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தி வருவதாக ஊடகங்களில் மூலம் வந்த செய்தியும், புகார்களையும் எடுத்துக்கொண்டு,  குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று வௌியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது-

கோடை காலத்தில் பயிற்சி வகுப்புகள், பயிற்சி பட்டறைகள் போன்றவைகள் நடத்த கடுமையாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மாநில கல்வித்துறைக்கு குழந்தைகள் உரிமை அமைப்பு  பரிந்துரை செய்துள்ளது.

கேரளாவில் கோடைகாலத்தில் வெயில் கொளுத்துகிறது, குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆனால், கோடை கால விடுமுறையின் முக்கியத்துவத்தை உணராமல் பள்ளிகள் நடக்கின்றன. குழந்தைகள் தங்களின் ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் செலவிட அனுமதித்தால்தான், அவர்களின் திறமையும், சமூக வாழ்க்கையும் முன்னேற்றம் காணும்

பள்ளிகளுக்கு எந்த விதமான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது, இந்த உத்தரவின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் மாநில கல்வித்துறை அறிக்கை அளிக்க வேண்டும் .  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios