வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் பொளந்து கட்டி அடித்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள், அரியலுார், கடலுார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்கள்,புதுக்கோட்டை,கடலுார்,அரியலுார்,மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். 

இதையும் படிங்க : இதுதான் பேட்ட பாயுற நேரம்.. கொங்கு மண்டலத்தில் ‘கெத்து’ காட்டும் சசிகலா.. அதிமுக தலைமை அதிர்ச்சி !