புதுக்கோட்டை

நெடுவாசலில் 113-வது நாளில் மக்களின் கோரிக்கையை காதில் வாங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வாயில் துணிகட்டிப் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று 113–வது நாளாக ஐட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு, மத்திய மாநில அரசுகளுகு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில், “ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பது” போன்று பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, பல மாதங்களாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வாயில் துணிகட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள், விசாயிகள் கலந்து கொண்டனர்.