The CBSE has said that since 2018 the same type of quotation will be issued for the selection process.
2018 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத் தாள்கள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தி முடித்தது.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் இல்லாமல் வெவ்வேறு மாநிலத்திற்கு வெவ்வேறு வகையிலான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்களும் எழுந்தன.
ஆனாலும் இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை எதன் அடிப்படையில் நடக்கும் என்பதில் நீண்ட காலம் குழப்பம் நீடித்துவந்தது.
இந்நிலையில், விரைவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தி முடிக்கவேண்டும் என சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வில் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது.
இதனால் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். ஆனாலும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2018 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத் தாள்கள் வழங்கப்படும் எனவும் அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
