The case of the balaji wife asking for divorce

நடிகர் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரின் மனைவி நித்யா, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மேடையிலேயே கடுமையாக பேசிக் கொண்டனர்.

இந்த நிலையில் தாடி பாலாஜி, தன்னுடைய ஜாதி பெயரை கூறி கொடுமைப்படுத்துவதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாடி பாலாஜி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், மனைவி நித்யாவுக்கும், பைசல் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி நித்யா, குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நித்யா கூறும்போது, பாலாஜியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்றார்.

என்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அவர் கூறியிருப்பதுபோல் யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்களோடு என்னை தொடர்புபடுத்தி பேசியதால், அவர்களது குடும்பத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது.

பாலாஜி கூறியதுபோல இவர்களோடு நான் பழகவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

எனது குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி நடப்பதாகவும், அவளை நானே நல்லபடியாக வளர்த்துக்கொள்வேன் என்றும் நித்யா கூறினார்.