The basic facilities for the government schools should be done immediately - Namakkal Collector Order ...
நாமக்கல்
நாமக்கல்லில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், "அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி செயல்பாடுகள்,
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்களை உரிய காலத்தில் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,
பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கட்டடம், மின் இணைப்பு, இடிக்கப்பட வேண்டிய கட்டடம், சத்துணவுக்கூடம், குடிநீர், கழிப்பறை வசதி,
மாணவ மாணவிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை
மற்றும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மனநல ஆலோசனை" போன்றவை குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். மேலும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராமசாமி, நாமக்கல் நகராட்சி ஆணையர் கே. பாலசுப்பிரமணியம் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
