சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி  சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் தமது மருத்துவ கனவு கலைந்து விட்டதே என நினைத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் அரசியல் கட்சிக ஆங்காங்கே போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜகவை சேர்ந்த தமிழிசை நீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நெட்டிசன்களால் நன்கு வசை வாங்கி வருகிறார். 

இருந்தாலும் வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்தாலும் நான் நீட்டுக்கு ஆதரவாகவே பேசுவேன் என தெரிவித்து வருகின்றார் தமிழிசை.  

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி  சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.