முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைய சமூதாயம் மது போதையில் சிக்கி தவிப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். நேரத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார். 

ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு

எனவே இந்த அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 500 கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 5ஆயிரத்து 329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளது. டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22ல் 36,056 கோடி ரூபாய் கிடைத்தது. 2022-23 ஆம் ஆண்டில் 44ஆயிரத்து 098 கோடியாக அதிகரித்தது. இந்தநிலையில் இதில் இபள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகே உள்ள மதுபானக்கடைகளின் பட்டியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 500 மீட்டருக்குள் இருக்கும் இரண்டு கடைகள் இருந்தால் ஒன்றை அகற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

கர்நாடக தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையை விமர்சிப்பதா..? பாஜக தலைவருக்கு ஆதரவாக களம் இறங்கிய நமீதா