ஆண்டிபட்டியில் தூர்வாரும் பணியை பார்க்க சென்ற அதிமுக எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வனை கிராம மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆகிய நீர் வரத்து பகுதிகளை தூர் வாரி சுத்தப்படுத்தி நிலத்தடி நீர் சேமிக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் குடிமராத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

மேலும் மேலும் ரூ.200 கோடி ஒதுக்கி, மாநிலம் முழுவதும் குளம் குட்டைகளின் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆண்டிபட்டியில் கண்டமனூர் பரமசிவம் கண்மாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் நெடு நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் தூர் வாரும் பணியை கிராம மக்களே பணம் வசூல்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த  தூர்வாரும் பணியை பார்க்கச் சென்ற ஆண்டிபட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வனை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.