தஞ்சாவூர் மாவட்டம் முத்தம்மாள்புரம்‌ கிராமத்தில்‌ காசி விஸ்வநாதசாமி கோவில் உள்ளது.‌ இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி சாமி சிலை கொள்ள அடிக்கப்பட்டது.  

தஞ்சாவூர் மாவட்டம் முத்தம்மாள்புரம்‌ கிராமத்தில்‌ காசி விஸ்வநாதசாமி கோவில் உள்ளது.‌ இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி சாமி சிலை கொள்ள அடிக்கப்பட்டது. 

82.3 செ.மீ. உயரம்‌ கொண்ட சிலையை திருடிய மர்ம நபர்கள், அதற்கு பதிலாக அதே வடிவில்‌ போலி சிலையை வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் போலி சிலை என்று சந்தேகமடைந்த கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கடந்த 2022 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு புகார் ஒன்றை கொடுத்தார். 

மேலும் படிக்க:மாற்றுப் பணி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலி ஆசிரியர்கள் நியமனம்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

அதன் பேரில்‌ வழக்கு பதிவு செய்த சிலை கடத்தல்‌ தடுப்புப்‌ பிரிவு போலீசார், முத்தம்மாள்புரம்‌ கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுக்குறித்த விசாரணையை தீவிரப்படுத்திய சிலை தடுப்பு போலீசார், உலகில்‌ உள்ள அருங்காட்சியங்கள்‌, கலைக்கூடங்கள்‌, ஏல மையங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ சிற்றேடுகளில்‌ சிலைகளை தேடுவதற்காக குழுக்கள்‌ அமைக்கப்பட்டன. 

இதனிடையே அமெரிக்காவில்‌ உள்ள கிறிஸ்டிஸ்‌ ஏல மையத்தில்‌ காசிவிஸ்வநாதர்‌ கோயில்‌ காலசம்ஹாரமூர்த்தி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில்‌ சிலைக்‌ கடத்தல்‌ தடுப்புப்‌ பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க:பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது..! திமுகவின் அலட்சியப் போக்கே காரணம்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு