Thanjavur Chanthappillai The 44-year-old built-in crackdown has caused a crash.
தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட்டில் ரூ. 44 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு வரும் முன்பே பாலம் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. மழைகாலங்களில் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். அப்போது வாகனங்கள் எல்லாம் சாந்தப்பிள்ளை கேட் வழியாக செல்லும்.
ரெயில் வரும்போது கேட் பூட்டப்பட்டு இருந்தால் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டியது வரும்.
இதனை தவிர்க்கும் வகையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு மேம்பாலம் அமைக்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ரெயில்வே மேம்பாலம் 1088 மீட்டர் நீளம் உடையது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் மேம்பால பணி முடிவடையும் என பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்ஜினியர்கள் தெரிவித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.
இந்நிலையில், வரும் 29ம் தேதி புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அந்த மேம்பாலத்தில் தேவைக்கு பயன்படுத்தும் முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
