சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, இன்று இரவு கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, இன்று இரவு கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வந்துசெல்லும் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடையில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக இன்று இரவு 6 மணி நேரம் இரு நடைமேடையிலும் ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது.

கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை ஆகிய இருமார்க்கங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே வேலையில் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.