2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கணினி வழித் தேர்வாக கடந்த அக்.14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 தேர்வர்கள் கலந்து கொண்டுடனர். இதை அடுத்து அக்.28 ஆம் தேதி தேர்வுக்கான கீ விடைகள் (key Answer) வெளிடயிடப்பட்டது. மேலும் இந்த தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objection) தெரிவிக்க தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: போலீசார் தயாராக இருக்க வேண்டும்... அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!!

அவ்வாறு வந்த அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கனமழை முன்னெச்சரிக்கை... திருவாரூர், தஞ்சையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

தேர்வு முடிவுகளை காண்பது எப்படி? 

  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • முகப்பு பக்கத்தில் login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பதிவு எண், கடவு சொல்லை சமர்ப்பிக்க வேண்டும்.
  • Dashboard'-ஐ கிளிக் செய்யவும்.
  • Score Card-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.