Asianet News TamilAsianet News Tamil

திமுகவா, அதிமுகவா ? யாருன்னு பார்க்கலாமா.. அடிதடி - கல்வீச்சு.. அன்னவாசல் பேரூராட்சி சம்பவம் !

மறைமுக தேர்தலையொட்டி அதிமுக, திமுகவினர் இடையே நிகழ்ந்த மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அன்னவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tensions were high in the Annavasal area as police used batons to prevent clashes between AIADMK and DMK in the run-up to the by elections
Author
Tamilnadu, First Published Mar 4, 2022, 11:56 AM IST

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tensions were high in the Annavasal area as police used batons to prevent clashes between AIADMK and DMK in the run-up to the by elections

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக – அதிமுக இடையே கடும் போட்டி என கூறப்படுகிறது. அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினருடன் திமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ள நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. திமுகவினரை அனுமதிக்க மறுப்பதாக கூறி போராடியவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

தலைவர் தேர்தலில் பிரச்சனை ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பிரச்சனை செய்த திமுகவினரை தடியடி நடத்தி போலீஸ் விரட்டியடித்தது. தலைவர் தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tensions were high in the Annavasal area as police used batons to prevent clashes between AIADMK and DMK in the run-up to the by elections

அதிமுக பெரும்பான்மையுடன் உள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் திமுகவினர் எதிர்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கல்வீச்சு மற்றும் காவல்துறையின் தடியடியால் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios