Asianet News TamilAsianet News Tamil

Temple Chariot Tragedy: துடித்துடித்து 11 பேர் பலி..விபத்திற்கு இது தான் காரணம்..உண்மையை போட்டு உடைத்த மக்கள்?

Tamilnadu Temple Chariot Tragedy:தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிக்ழந்த தேர் திருவிழாவில் நேர்ந்த விபத்திற்கு, சாலை உயர்த்தப்பட்டதே காரணம் என்று கிராம மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
 

Temple Chariot Tragedy: The reason for the accident was that the road was raised - the villagers
Author
First Published Apr 27, 2022, 11:04 AM IST

Tamilnadu Temple Chariot Tragedy:தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிக்ழந்த தேர் திருவிழாவில் நேர்ந்த விபத்திற்கு, சாலை உயர்த்தப்பட்டதே காரணம் என்று கிராம மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடத்தில்,ஆண்டு தோறும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அப்பர் சதய விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டான அப்பர் சதய திருவிழா நேற்று தொடங்கியது. இட்ன திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். 

Temple Chariot Tragedy: The reason for the accident was that the road was raised - the villagers

அப்பர் கோவில் தேர் திருவிழா:

இந்நிலையில் சித்திரை திருவிழாவில் நேற்றிரவு தேர் திருவிழா நடைபெற்றது. அப்பர் மடத்திலிருந்து மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து களிமேடு கிராமத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் தேரானது கீழ்த்தெருவிலிருந்து முதன்மை சாலைக்கு வந்து, அங்குள்ள திருப்பத்தில் திரும்பிய போது, அப்போது சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்து நேரிட்டது.

Temple Chariot Tragedy: The reason for the accident was that the road was raised - the villagers

தேர் விபத்து- 11 பேர் பலி: 

இதில் 11 பேர் மின்சாரம் பாயந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.காயமடைந்த 13 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரானது வளைவில் திருப்பும் போது தேருடன் இருந்த ஜெனேட்டர் சிக்கியுள்ளது. ஜெனேட்டரை சரி செய்யும் போது தேரின் உச்சி, உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதனால் தேரை இழத்து மக்கள் மற்றும் சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது என்று தஞ்சை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பானுப்பிரியா விளக்கம் அளித்துள்ளார். 

Temple Chariot Tragedy: The reason for the accident was that the road was raised - the villagers

சாலை உயர்வு - பொதுமக்கள்:

இந்நிலையில்  தேர் விபத்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது,களிமேடு முதன்மை சாலையில் கடந்த ஆண்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ஏற்கனவே இருந்த அளவை விட பெரிதாக போடப்பட்டது. இதனால் தேரை வளைவில் திருப்பி முதன்மை சாலைக்கு இழுத்து வரும் போது, ஆடி அசைந்து வந்தது.  இதனால் மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் தேரின் உச்சப் பகுதி உரசியதனால் விபத்து நேரிட்டது. மேலும் சாமி தேர் வருவதனால் சாலை முழுவதும் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்ததால்,  மின்சாரம் வேகமாக பரவியதாகவும் இதுவும் உயிரிழப்பு அதிகமாவதற்கு காரணமாகவிட்டது என்று கூறிகின்றனர்.மேலும் மின்சார பாய்ந்த வேகத்தில் மின் தடை ஏற்பட்டது. உயிருக்கு  போராடிக்கொண்டிருந்தவர்களை நெஞ்சு பகுதியை அழுத்தி முதலுதவி செய்தோம். பின்னார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்களை தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும் எங்களால் பலரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று வேதனை தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios