Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின், மோடி... இது என்ன லாஜிக்: தமிழிசை கேள்வி!

தமிழ்நாடு முதல்வர் வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை சாதனை என்கின்றனர் ஆனால் அதை பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை விமர்சிக்கின்றனர் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Telangana governor tamilisai soundararajan question about mk stalin foreign trip
Author
First Published Jun 28, 2023, 4:04 PM IST

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த தெலங்கான ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விமான நிலையத்தில் காவலர்கள் மறியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ பல ஆண்டுகளுக்கு பிறகு  இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உயரிய விருது வழங்கி இருப்பது  பெருமைதான். இதன் மூலம் உலகில் பிரபலமான பிரதமர் என்ற பெயரை பிரதமர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு எதற்கு தீர்வு என்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று  எதற்கு தீர்வு என்றாலும் மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையை செலுத்துவது என்பது பிரதமரின் மிகபெரிய சாதனை.” என்றார்.

மேலும், தமிழ்நாடு முதல்வர் வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை சாதனை என்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை விமர்சிக்கின்றனர். வெளிநாட்டு பயணம் செல்வது முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி பிற நாடுகளின் துணை நம் நாட்டிற்கு கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் சாலையில் உறங்கிய 2 மாத குழந்தை கடத்தல்; தாய் கதறல்

தமிழகத்தில் தென்பகுதிகள் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அவர், “தென்பகுதியில் நடைபெற்று வரும் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதன் மூலம் நேரடியாகவுன் மறைமுகமாகவும் 10-ஆயிரம் முதல் 15-ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும் என்றார். தென் தமிழகமும் மத்திய அரசின் பல முயற்ச்சியினால் வளர்ச்சியடைய இருக்கின்றது. எனவே ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சரவதேச விமான நிலையமாக வளர்ச்சியடையும். அதில் எனது பங்கும் இருக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை, வந்தே பாரத் 25ஆது ரயில், நமது பெரம்பூர் இரயில்பெட்டி தொழிற்சாலையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இன்று நமது நாட்டில் தயார் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இந்த தொழில் நுட்பங்கள் முதலிலையே இருந்தது. ஆனால் ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த அரசுகள் அதனை பயன்படுத்தவில்லை. ஆனால் பாரத பிரதமர் சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் நமது நாட்டிலேயே அனைத்து பொருட்களும் தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த திட்டத்தை ஊக்குவித்து வந்தே பாரத் ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டம் இந்தியா முழுவதும் நகரங்களை இணைக்கின்றது அதில் தமிழகத்தின் பங்கு இருக்கின்றது எனவே வந்தே பாரத் ரயில் திட்டம் தென் பகுதியும் இனைக்க வேண்டும் என்பது என்னே போன்றோர்கள் ஆசை.” என்றார்.

உலகிலியே இரண்டாவது  நீளமான மிகபெரிய தேசிய நெடுஞ்சாலையை இந்தியா கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனவே இணைப்பு வந்தாலே வளர்ச்சியும் சேர்ந்து வந்துவிடும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios