செங்கல்பட்டு சிறார்கள் சிறப்பு இல்லத்தில் மாணவர்கள் தாக்கியதில் மூன்று ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சிறுவர் சிறப்பு இல்லத்தில் 48 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பகலில் விளையாட்டு, கலைத்திறன்களை வளர்ப்பது, பாடம் கற்பிப்பது வழக்கம். பின்னர் இரவு நேரத்தில் இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளே அடைத்து வைக்கப்படுவர்.
திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பகல் நேர பணிகள் முடிந்தவுடன் இல்ல வளாகத்தில் சுற்றித் திரிந்த மாணவர்களை அறைக்குச் செல்லும்படி மனோதத்துவ ஆசிரியர்கள் துளசி ராமன், விஜயசாரதி மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் கூறியதாகத் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்களை பயங்கரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், 3 ஆசிரியர்களும் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
