கரூர்

கரூரில், அரசுப் பள்ளியில் படிக்கும் 7-ஆம் வகுப்பு மாணவன் தனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவறிழைத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவலாளர்கள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். அருள்பிரகாசம் தனது சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளதால் தவறிழைத்த ஆசிரியர்களை கண்டுபிடிக்கும் முனைப்பில் காவலாளர்காள் ஈடுபட்டுள்ளனர்.

கடிதம் எழுதிவைத்துவிட்டு 7-ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.