ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை சண்முகப்பிரியா வீட்டின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜா என்பவரின் மனைவி சண்முகப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், சண்முகப் பிரியா வீட்டின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சண்முகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆசிரியை கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ள சண்முகப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி களவாடப்படாதது, கொடூரமான முறையில் மனைவி வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்பட்டும் கணவர் மோகன் ராஜ் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பது ஆகியவற்றால் சந்தேகமடைந்த போலீசார், சண்முகப்பிரியாவின் கணவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.