தண்டராம்பட்டு அருகே நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏர்பட்ட தகராறில் சித்தியை அடித்த அரசுப் பள்ளி ஆசிரியரை புகாரின் பேரில் காவலாளர்கள் கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தண்டராம்பட்டை அடுத்த ஏரிதண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (46). இவர், மல்காபூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இவரது சித்தப்பா செல்வராஜ் (58).

கோவிந்தசாமி, செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தை இருவரும் சரிசமமாக பங்கிட்டு, விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 20-ஆம் தேதி செல்வராஜ் மனைவி சாந்தா (56), நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார்.

அப்போது, கோவிந்தசாமிக்கும், சாந்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, அங்கிருந்த மரக்கட்டையால் சாந்தாவைத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சாந்தா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தானிப்பாடி காவலாளர்கள் வழக்குப்பதிந்து கோவிந்தசாமியை கைது செய்தனர்.