Asianet News TamilAsianet News Tamil

டாக்சி, தனியார் பேருந்துகளைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை...! தமிழக அரசு முடிவு

Taxi decided to monitor private buses - TN Govt
Taxi decided to monitor private buses - TN Govt
Author
First Published Apr 22, 2018, 1:03 PM IST


தமிழ்நாட்டில் இயங்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளைக் கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், குற்றச் செயல்களைக் குறைக்கவும் மத்திய போக்குவரத்து துறை கடந்த ஜனவரி மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 

அந்த உத்தரன்படி நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டில் செயல்பட்டு வரும் தனியார் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஜி.பி.எஸ். ஆகியவை பொருத்த வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரி இருந்தது. இதற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அவசாகம் கொடுக்கப்பட்டிருந்தது. 

மத்திய போக்குவரத்து துறையின் உத்தரவு, தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில்,
டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளைக் கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டாக்சி மற்றும் தனியார் பேருந்துகள் என 2 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இந்த வாகனங்கள் அனைத்திலும் இன்னும் சில நாட்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை பொருத்தப்பட உள்ளது. அந்த விவரங்கள் கட்டுப்பாட்டு அறை மூலம் சோதிக்கப்பட உள்ளது. 

இதற்கான ஆணை, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், தமிழக அரசால் எப்படி கண்காணிக்கப்பட்டு வருகிறதோ அதேபோல இதுவும் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios