திருவாரூர்

சொத்து வரி உயர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூரின் 12 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் இக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி, கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் கேசவராஜ் தலைமை வகித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் துணைச் செயலாளர் பன்னீர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ஜெயபால், மணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "சொத்து வரி உயர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.