டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - குடிமகன்கள் வருத்தம்
அக்டோபர் மாதத்தில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வருவதால் மது பிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இன்று அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த ஒரே மாதத்தில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, 4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமி, 9ம் தேதி மிலாது நபி, 24ம் தேதி தீபாவளி ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ளச் சாராயம் அழிப்பு
5 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் மட்டும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டாய விடுப்பு விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 நாட்களும் விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் இந்த மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை டாஸ்மாக் விடப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி “வருகிற 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டும், 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகையான மதுபான கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மதுபான கடைகளுடன் இயங்கும் பார்களும், மதுபான சில்லறை விற்பனை கூடங்களும், பெரிய ஓட்டல்களில் செயல்படும் பார்களும் மூடி இருக்க வேண்டும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் மீதி சில்லறை கேட்ட குடிமகன் மீது தாக்குதல் முயற்சி