தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. சாதாரண நாட்களில் தினமும் ரூ.70 கோடி கிடைக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரை வருமானம் வருகிறது. மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப் போவதாக சட்டசபை தேர்தலின்போது திமுக அறிவித்தது. ஆனாலும் டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி உள்ளது.

தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 2022 புத்தாண்டுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசூல் என்பது கடந்த ஆண்டு புத்தாண்டை விட குறைவாகும்.

ஏனெனில் கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் 41.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
