tasmac collection in pongal festival at kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் கடந்த பொங்கலை விட இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று மது விற்பனை நடந்து இருக்கிறது. டாஸ்மாக்கின் இந்த அபார வசூலால் படு குஷியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது 105 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் தினமும் ₹2.25 கோடியில் இருந்து ₹2.50 கோடி வரை மது விற்பனை ஆகி வருகிறது.

விழா காலங்களில் டாஸ்மாக் விற்பனை எப்போதும் விட அதிகமாகவே இருக்கும். இந்தவகயல் கடந்த பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான போகி பண்டிகை, பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தமிழக டாஸ்மாக் வழக்கத்தைவிட அடிக்க லாபத்தை ஈட்டியுள்ளது. அந்த மூன்று நாட்களில் வசூலில் சாதனை படைத்தது டாஸ்மாக் நிறுவனம்.

போகி பண்டிகை நாளில் (13ம் தேதி) ₹3 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 340ம்,

அடுத்தநாளான பொங்கலன்று (14ம் தேதி) அன்று ₹4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 565ம் மது விற்பனை நடந்துள்ளது.

இந்த வசூல் கடந்த ஆண்டு 13ம் தேதி 4,525 பெட்டி மதுவும், 927 பெட்டி பீரும் விற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 5,275 பெட்டி மதுவும், 1,193 பெட்டி பீரும் விற்றுள்ளது. கடந்த ஆண்டு 14ம் தேதி 6,495 பெட்டி மதுவும், 1,315 பெட்டி பீரும் விற்றுள்ளது.

இந்த ஆண்டு அதே தேதியில் 7,034 பெட்டி மதுவும், 1,959 பெட்டி பீரும் விற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கலின் போது இரண்டு மடங்காக அதிகரித்து மது விற்பனையாகி உள்ளது. இந்த ஆண்டு போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை என இரு நாட்களிலும் மொத்தம் ₹7 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 905க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த புத்தாண்டு மற்றும் அதற்கு முந்தைய நாள் மொத்தமாக ₹6 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரத்து 5க்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.

அதைவிட இந்த ஆண்டு பொங்கல் விற்பனை ₹50 லட்சத்து 53 ஆயிரத்து 900 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த விற்பனையால் டாஸ்மாக் நிறுவனம் அதிகம் லாபம் ஈட்டியுள்ளது.