Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : சென்னை மக்களே உஷார்…. இன்று இரவு என்ன நடக்கும்னா..? - தமிழ்நாடு வெதர்மேன் தகவல் !

 

இன்று இரவு சென்னை மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

 

Tamilnadu weatherman pradeep john said new weather report
Author
Tamilnadu, First Published Nov 30, 2021, 2:08 PM IST

குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

Tamilnadu weatherman pradeep john said new weather report

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.அதில், ‘இன்று இரவு முதல் நாளை காலை வரை ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புஃல் எபெக்ட் மூலமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

காற்று மேகக் கூட்டங்களை இழுத்து செல்லும் போது இந்த மழை பெய்யும்.சில நேரங்களில் இது போன்ற மழை ஆச்சரியங்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகும்போது எதிர்பக்கம் மேகங்களை ஈர்க்கும் என்பதால், 50 முதல் 100 மில்லி மீட்டர் மழை அளவுக்கு கூட கொட்டி தீர்த்து உள்ளதை இதற்கு முன்பு நாம் பார்த்துள்ளோம்.
Tamilnadu weatherman pradeep john said new weather report

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இருந்தால் கூட, வங்கக் கடலோரம் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இன்று இரவு முதல் அதிகாலை வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது இவரது பதிவின் சாராம்சமாக உள்ளது. முன்னதாக அவர், இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒரு ஸ்பெல் மழை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளை சுற்றி அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகு மழை குறையும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், பிறகு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆச்சரியப்படத்தக்க அளவில் மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே சென்னை  மக்களே உஷாராக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios