மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 13ல் தொடங்க வாய்ப்பு.
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை:
தென்மேற்குப் பருவமழை ஆனது, வருகின்ற 13-ஆம் தேதி அளவில் தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளது
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
18 மாவட்டங்களுக்கு அலர்ட்:
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


