TN 10th exam result 2024 : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.! தேர்ச்சி விகிதம் 91.55% - மாணவிகளே சாதனை
10ஆம் வகுப்பு தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது
தமிழக அரசு சார்பாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பொதுத்தேர்வாக 10ஆ ம் வகுப்பு தேர்வு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 26 ந் தேதி முதல் ஏப்ரல் 8 ந் தேதி வரையிலும் 4107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in , https://results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,18,743.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி. தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 4,22,591., மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம்.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,96,152.மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம்.மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.