Asianet News TamilAsianet News Tamil

மத்தியின் லிஸ்ட்டில் இடம் பிடித்த தமிழகம்...! எதில் தெரியுமா?

tamilnadu placement for central govenment smart list
tamilnadu placement for central govenment smart list
Author
First Published Jan 19, 2018, 6:56 PM IST


மத்திய அரசு சார்பாக புதிதாக 9 ஸ்மார் சிட்டி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த புதிய 9 ஸ்மார்ட் சிட்டிக்களின் பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக 9 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் சில்வாசா, தியு, பிஹார்ஷரீப், பரேலி, இட்டாநகர், மொராதாபாத், சஹாரன்பூர், கவரட்டி ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுவரை 99 நகரங்கள் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் இந்த ஸ்மார் சிட்டி திட்டத்திற்கான லிஸ்டில் தமிழகத்தில் இருந்து ஏற்கனவே சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம்,வேலூர், தஞ்சாவூர், வேலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. 

இதைதொடர்ந்து தற்போது இந்த லிஸ்ட்டில் ஈரோடும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூ. 500 கோடி செலவில் ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios