அடிச்சு தூக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் முக்கிய சாலைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை சென்னைக்கு அருகே கடல் பகுதியில் உருவான மேகத்ததிரளால் இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அதிக பேர் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டனர். இதனால், நேற்றைய தினமே சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- வானத்தை பிளந்துக் கொண்டு கொட்டிய மழை… 10 நிமிடத்தில் இவ்வளவா?
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- கனமழை எதிரொலி... புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை