மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தாய்லாந்து வளைகுடா அதனை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி , மத்தியவங்க கடலில் நிலவி வருகிறது. இது 3 நாட்களில் அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம். நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் நெருங்கும் போது மழையை எதிர்பார்க்கலாம்.

இதன் காரணமாக வரும் 10, 11, 12, 13-ம் தேதிகளில் மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.