வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் ஏற்படும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், மதுரை சிட்டம்பட்டி 4 செ.மீ., கரூர் குளித்தலை 3 செ.மீ., தர்மபுரி பாப்பாரப்பட்டி, திருச்சி துரையூர், சேலம், வாழப்பாடி, சிவகங்கை 2 செ.மீ., பட்டுக்கோட்டை, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.