தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது, சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. கிண்டி, திருவேற்காடு, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையம் 8 செ.மீ., ஜெயங்கொண்டம் 7 செ.மீ., அறந்தாங்கி 5 செ.மீ மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.