Tamilnadu Government Officers Announced HungerStrike on coming 20
திருநெல்வேலி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அமைப்பின் மாவட்டத் தலைவர் அருணாசலம் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "'தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறைய அமல்படுத்த வேண்டும்,
ஏழாவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது மாவட்டத் துணைத் தலைவர்கள் சங்கரநாராயணன், சண்முக மூர்த்தி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
