பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றம் உத்தரவு :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருக்கிறது. விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்து இருக்கிறது.

செல்போன் பயன்படுத்த தடை :

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. விதிகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அலுவலக நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு செல்போன் பயன்படுத்துவதாக திருச்சியைச் சேர்ந்த ராதிகா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.