தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2 வது இடம் வகிப்பதாக ஸ்நேகா தற்கொலை தடுப்பு அமைப்பு நிறுவனர் லக்ஷ்மி விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா அமைப்பின் 31 வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் நிறுவனர் லக்ஷ்மி விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :

தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் புதுச்சேரி முதல் இடத்திலும் தமிழகம் 2 வது இடத்திலும் இருக்கிறது.

நாடு முழுவதும், 2012 முதல் 2015 வரை 45 ஆயிரத்து 777 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

தற்கொலைக்கு மன உளைச்சல், மன அழுத்தமே முக்கிய காரணங்களாக உள்ளன.

2005 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 17.5% உயர்ந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுவரை 2500 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2015 முதல் துணை பொதுத்தேர்வை தமிழகம் அறிமுகம் செய்த பின் தற்கொலை குறைந்தது.

2015 க்கு பிறகு தற்கொலை எண்ணிக்கை 454 ல் இருந்து 250 ஆகா குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.