tamilnadu e service centres holidayon saturday
நாளை மறுநாள் ஜுன் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சர்வர் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இ-சேவை மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு, வருமானம், ஜாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை மறுநாள் சனிக்கிழமை இ-சேவை மையங்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சர்வர் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை அரசு இ–சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் விடுமுறை. எனவே அரசின் இ–சேவை மையங்கள் 18–ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
