ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களை முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது தமிழர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.நான் கூறிய விளக்கத்தை கேட்டு அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவராணம் கொடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்த உரிய சட்ட திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடியை வலியுறுத்தயுள்ளேன். நாளை காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்தித்து தமிழக மக்களின் கோரிக்கையை தெரிவிப்பேன்.ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கிடைக்கும் தமிழகத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் கேட்ட போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்திலும் மத்திய அரசு உடன் சுமுகமான உறவு இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அதன்படி இன்றும் தொடர்ந்து வருவதாக தெரிவித்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
Latest Videos
