tamilisai who suffered general public peace Complaint petition to take action ...
பெரம்பலூர்
தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிகவினர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் பேரா.முருகையன் தலைமைத் தாங்கினார்.
அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நற்பெயருக்கும், சமூக பணிக்கும் மக்கள் மத்தியில் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற செய்தியை பரப்பி வருகிறார்.
தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது இந்திய தண்டணைச் சட்டத்தில் தண்டணைக்குரிய குற்றமாகும்.
எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
