இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் ஆபரேஷன் அஜய் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்

Tamil people who stranded in israel returned to tamilnadu smp

இஸ்ரேல் - பாலஸ்தீனம்  நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் வாட்சப் குழுக்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள தமிழர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்குள்ள தமிழர்களிடம் தற்போது தொடர்பு கொண்டு, சுமார் 84 நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்த நபர்களில் கோயம்புத்தூர், திருவாரூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் ஒன்றிய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் முதற்கட்டமாக நேற்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சிறப்பு விமானத்தில் இன்று காலை 6 மணிக்கு தலைநகர் டெல்லி வந்தடைந்தனர்.

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி வேதனை!

டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 14 நபர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 7 நபர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த 14 பேரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த 7 தமிழர்களையும், அம்மாவட்ட ஆட்சியர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios