World record: 197 நாடுகளின் கொடியை 4 நிமிடத்தில் கூறி சர்வதேச சாதனை படைத்த தமிழ்நாட்டு குழந்தை !!
197 நாடுகளின் கொடிகளை 4 நிமிடத்தில் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை படைத்துள்ளது தமிழக குழந்தை.
மூன்று வயதே ஆன குழந்தை ஒன்று நாம் அனைவரும் வியக்கும் சாதனை ஒன்று செய்துள்ளது.
சசிரேகா மற்றும் பாரத் தம்பதியினரின் மகனான தர்ஷன் என்ற குழந்தை சர்வதேச சாதனை செய்து அசத்தியுள்ளது. 4.40 நிமிடங்களில் 197 நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் கண்டு, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கலாமின் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த தர்ஷன், தற்போது தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளார். முன்னதாக, 4 வயது இந்திய சிறுவன் ஒருவன் கொடிகளால் நாடுகளை அடையாளம் கண்டு சர்வதேச சாதனை செய்துள்ள நிலையில், அதன் சாதனையை தர்ஷன் முறியடித்துள்ளார். டெல்லியில் உள்ள சர்வதேச சாதனை புத்தக குழு விழுப்புரம் சிறுவனின் சாதனையை பாராட்டி சான்றிதழும், பதக்கமும் வழங்கியது.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி பேசிய தர்ஷனின் தாயார், “கல்வியாளர்களுக்கு அப்பால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வாழ்க்கைத் திறன்களைக் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தர்ஷனின் திறமைகளைக் கண்காணிக்க நான் அதைச் செய்தேன்.
அவர் இப்போது ஒரு சர்வதேச சாதனையை முறியடித்துள்ளார் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்காணித்து ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்