Tamil Nadu Rural Development Officers

திருப்பூர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணை செயலாளர் ரமேஷ் கோரிக்கைகள் விளக்கிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று கோரிக்கைக்கு வலுசேர்த்தனர்.