திமுக அரசுக்கு எதிராக போராடிய பகுதி நேர ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். 

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஒவ்வொரு நாளும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தும், காவல்துறையினர் அவர்களை அடாவடியாக கைது செய்வதும் வாடிக்கையாக இருந்தது வந்தது.

பூச்சி மருத்து குடித்த ஆசிரியர்

இதேபோல் நேற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது பகுதி நேர ஆசிரியரான பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் என்பவர் பூச்சி மருத்து குடித்து மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைகாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜனவரி 14) கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சோகத்தில் மூழ்கி கதறி அழுதனர். தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அரசு கண்டுகொள்ளாததால் அந்த விரக்தியில் கண்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தமிழக அரசுக்கு கோரிக்கை

இது தொடர்பாக காவல்துறைனர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் கண்ணன் பெரம்பலூர் வேப்பந்தட்டையில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கண்ணன் உடலை சக ஆசிரியர்கள் பார்ப்பதற்கு காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பகுதி நேர ஆசிரியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கண்னனின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.