தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது - ஸ்டாலின் பெருமிதம்
நாட்டில் தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும், அதனை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, விடுதலை அடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணல் காந்தி அடிகள் கனவு கண்டார்கள். அது அனைவருக்கும் பொதுவான நாடாக இருக்கவேண்டும். சாதி, மத வேற்றுமைகள் இருக்கக் கூடாது. இந்தியர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். கதர் கிராமத் தொழில்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அனைவருக்கும் கல்வி வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும். அதேபோல், அது மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அது அமைய வேண்டும். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த வாரம் நிவாரணத் தொகை - முதல்வர் அறிவிப்பு
“நான் முதல்வன்” என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது. இதனுடைய பயன் என்பது ஓராண்டில் - ஐந்தாண்டில் முடிவடைவடையக் கூடியதல்ல. தலைமுறை தலைமுறைக்கு அவர்களுக்கு நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பயன்படக்கூடிய திட்டமாக அது அமைந்திருக்கிறது.
மக்னாவை பிடிக்க மீண்டும் கம்பீரமாக களத்தில் இறங்கிய சின்னதம்பி யானை
100 விழுக்காடு படிப்பறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை நாம் நிச்சயமாக எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.