Asianet News TamilAsianet News Tamil

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த வாரம் நிவாரணத் தொகை - முதல்வர் அறிவிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் அடுத்த வாரம் நிவாரண தொகை வரவு வைக்கப்படும் என மன்னார்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

farmers compensation money will deposit next week says cm mk stalin
Author
First Published Feb 23, 2023, 10:35 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக பிரமுகர் பாலசுப்பிரமணியன் இல்ல திருமண விழாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். அதில் இரண்டு நாட்களாக நமது திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சுற்றுப்பயணத்தை நடத்தி கொண்டு வருகிறேன்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாநிலம், நாடுகளுக்கு சென்றிருந்தாலும் திருவாரூர் வந்துள்ளது இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சி உங்களுடைய ஆட்சி. நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை கூடிய விரைவில் நிறைவேற்றுவேன். ஐந்து வருடங்கள் பொருத்திருக்க தேவையில்லை.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வெளியிட்டோம். இந்த ஆண்டும் தனி பட்ஜெட் வெளியிடப்படும். அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்கிறோம்.விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி இந்த ஆட்சி நடைபோட்டு கொண்டு வருகிறது. கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலமாக தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்ப கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக வேளாண்துறை, உணவுத்துறை அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இன்னும் ஒரு வாரத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் நிவாரணதொகை வரவு வைக்கப்படும் என முதலமைசர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

திருமண நிகழ்வு முடிந்து வரும் வழியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மன்னார்குடி பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இடத்தில் புதிதாக 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. அதற்காக பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு மத்திய அரசு அனுமதி - எம்பி செல்லகுமார் தகவல்

மேலும் ஒருங்கிணைந்த இந்த பேருந்து நிலையத்திற்கான வரைபடத்தை பார்வையிட்டு அது குறித்த சந்தேகங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios