மாற்றுதிறனாளிகளின் நலனில் தமிழகமே முன்னோடியாக திகழ்கிறது என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.  
மாற்றுத்திறநாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தி நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது அவர் கூறியதாவது: 
மாற்றுத்திரனாளிகளுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
மாற்றுதிறனாளிகளின் நலனில் தமிழகமே முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திரனாளிகள் உள்ளனர்.
மாற்றுத்திரனாளிகளுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது.
அவர்கள் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்று தமிழக அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. 
மாற்றுத்திரனாளிகளுக்கு தகுந்தாற்போல் அனைத்து உபகரணங்களும் தரப்பட்டு வருகின்றன.
அம்மா ஜெயலலிதாவின் ஆணைப்படி மாற்றுத்திரனாளிகளுக்கு மாதம் மாதம் உதவித்தொகை வழங்கபட்டு வருகிது. 
மேலும் மாற்றுத்திரனாளிகள் குழந்தைகளுக்காக 238.18 கோடி ரூபாய் நிதியுதவிக்காக மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள் 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.